ஞாயிற்றுக் கிழமைகளில் வவுனியா வர்த்தக நிலையங்களைப் பூட்டி ஊழியர்களுக்கு விடுமுறை வழங்குமாறு வவுனியா வர்த்தகசங்கத்தினரால் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கிணங்க இன்று வவுனியா நகரில் உள்ள பெரும்பாலான வர்த்தக நிலையங்கள் பூட்டபட்டிருந்தன.
வர்த்தக சங்கப் பிரதிநிதிகள் திறக்கப்பட்டிருந்த வர்தகநிலைய உரிமையாளர்களிடம் சென்று வேண்டுகோள் விடுக்கபட்டமைக்கமைவாக சிலர் பூட்டியிருந்ததாகவும் வவுனியா வர்த்தக சங்கத் தலைவர் தெரிவித்துள்ளார்.
வவுனியா தனியார்பேருந்து உரிமையாளர் சங்கம், முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கம்,சிகை அலங்கரிப்பாளர் சங்கம், உள்ளூர் விளைபொருள்கள் விற்பனையாளர் சங்கம் ஆகிய நான்கும் இனிவரும் காலங்களில் இணைந்து செயற்படுவதாக முடிவெடுக்கபட்டுள்ளது என்றும் வவுனியா வர்த்தக சங்கத் தலைவர் தெரிவித்துள்ளார்.