காவல்துறை அதிகார த்தை வழங்கினால் இரண்டு மாதங் களில் வடக்கில் இடம்பெறும் வன் முறைச் சம்பவங்களை அடக்கிக் காட் டுவதாக வடக்கு முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் மத்திய அரசுக்கு சவால் விடுத்துள்ளார்.
கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே இதனை தெரிவித்து ள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், எந்த ஒரு சுய நிர்ணயம் பெறும் அரசியல் அலகும் காவல்துறை காணி அதிகாரங்களை கொண்டி ருக்க வேண்டும்.
காணிகள்தான் எங்களு டைய அடையாளம். எமக்கு காணி அதிகாரம் இல்லை என்றால் எமது அடையாளம் தொலைந்து போகும். எமது பாதுகாப்பையும் சட்டம் ஒழுங்கையும் பிறர் கையில் கொடுத் தால் என்றென்றும் நாம் அவர்களுக்கு அடி மையாக இருப்போம். அதிகாரம் எம்மிடம் இருந்தால் பிறர் எம்மிடையே ஏற்படுத்தி வரும் கலகங்களையும் கலக்கங்களையும் நாங்கள் களைய முடியும்.
காவல்துறைக்கு ஆணையிடும் அதிகாரம் எங்களுக்கு இரு க்கிற மாதிரி தெரிந்தாலும் அது இல்லை. இந்த நிலையிலேயே எங்களுக்கான அதிகாரமகிடைத்தால் அத்தோடு மக் களை எங்களுடைய காவல்துறை பாதுகாப்பு படை யிலே சேர்த்து இருந்தோம். ஆனால் உட னேயே நடவடிக்கைகளை எடுக்கலாம் ஏனெ ன்றால் மக்கள் நடந்த வற்றைப் பற்றி உண்மையைச் சொல்ல முன்வருவார்கள்.
பயம் இல்லாமல் முன்வரு வார்கள். அதைவிட 150,000 படையினர் வட மாகாணம் முழுவதும் இருக்கிறார்கள். அவர் களும் அங்கிருந்து படிப்படியாக நீக்கப்பட வேண்டும்.
2009இல் எந்தவிதமான போதைப்பொருள் பாவனையும் இல்லாத இடமாக அரசாங்கமே ஏற்றுக்கொண்ட இடம்தான் வட மாகாணம். ஆனால் இன்று எங்குமே இது விநியோகிக்கப்படுகிறது. இந்த அதிகாரம் எங்களுடைய கையில் வந்தால் எங்களால் கட்டாயமாக கட்டுப்படுத்த முடியும் என தெரிவித்தார்.
Home
ஈழச்செய்திகள் காவல்துறை அதிகாரத்தை வழங்கினால் – வன்முறையை இரண்டு மாதங்களில் அடக்கிக்காட்டுவேன் !