இந்தோனேசியாவில் 6.4 ரிச்டர் அளவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி 10 பேர் உயிரிழந்து 33 பேர் காயமடைந்துள்ளதாக முதல்கட்ட அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இந்தோனேசியாவின் மத்திய பகுதியிலுள்ள லொம்போக் ( Lombok) தீவில், இன்று (29) அதிகாலை 5.45 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தைத் தொடர்ந்து பல கட்டடங்கள் சேதமடைந்துள்ளன.
அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வருகைதருகின்ற லொம்போக் தீவு, பாலி தீவிலிருந்து 40 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
இந்தோனேசியாவில் 2004 இல9.3 ரிச்டர் அளவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து ஏற்பட்ட சுனாமியால் 220 000 பேர் உயிரிழப்பும், உடமை இழப்பும் ஏற்பட்டடிருந்தது. இன்றைய நிலநடுக்கத்தை தொடர்ந்து எவ்விதமான சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை.