இந்த நூற்றாண்டின் நீண்ட சந்திர கிரகணம் இன்று இரவு (27) நிகழ்கிறது
உலகிலேயே இந்த நூற்றாண்டில் இதுதான் நீளமான சந்திர கிரகணம் ஆகும்.
சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையில் பூமி வருவதே சந்திர கிரகணம் ஆகும். மூன்றும் நேர்கோட்டில் இருக்கும் இந்த நிகழ்வு மிக முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் இந்த நூற்றாண்டின் மிக நீண்ட சந்திர கிரகணம் இன்று ஏற்பட உள்ளது.
சூரியன், நிலவு, பூமி மூன்றும் நீண்ட நேரம் ஒரே நேர்கோட்டில் இருக்க போகிறது. சுமார் 103 நிமிடங்கள் தொடர்ந்து ஒரே நேர்கோட்டில் இருக்கும். இதனால் சந்திர கிரகணம் மிக நீண்டதாக இருக்கும்.
இந்த சந்திரகிரகணம், இன்று இரவு ஐரோப்பிய நேரம் 9.30 மணிக்கு தொடங்கும். 11.13 மணி வரை நீடிக்கும். இதனால் நிலவு சிவப்பு நிறத்தில் ரத்தம் போல காட்சியளிக்கும்.
இதை பார்க்கலாம் என்று கூறப்படுகிறது. இதனால் எந்த விதமான பிரச்சனையும் ஏற்படாது. இனி இதே போன்ற நீளமான முழு சந்திர கிரகணம் 2029-ம் ஆண்டு அன்று ஜூன் மாதம் 25-ந் தேதி ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.