முல்லைத்தீவு மாவட்டத்தில் பொதுமக்களின் விபரங்களை திரட்டும் நடவடிக்கையில் சிறீலங்காப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.
முல்லைத்தீவு உடுப்புக்குளம்,மற்றும் உடையார்கட்டு, சுதந்திரபுரம், கைவேலி, றெட்பானா, மாணிக்கபுரம் பகுதியில் மக்கள் மற்றும் பொதுமக்கள் வைத்திருக்கும் வணிக நிலையங்களின் விபரங்களை திரட்டும் நடவடிக்கையிலும் சிறீலங்காப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.
மக்களின் வீடுகளுக்கும், வணிக நிலையங்களுக்கும் செல்லும் படையினர் அங்கு குடும்பத்தலைவர் யார், எத்தனை அங்கத்தவர்கள், என்ன வேலை செய்கின்றார்கள் போன்ற விபரங்களைத் திரட்டிவருவதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
மக்களின் இயல்பு வாழ்க்கையை அச்சுறுத்தும் நடவடிக்கையாகவே பார்க்கப் படுகின்றது. வெளியூரில் வேலை செய்பவர்கள்விபரங்களையும், மணவர் விபரங்களையும் பிரத்தியோகமாக சேகரிக்கரிக்கின்றனர்.