வவுனியா மாவட்டத்தில் வரட்சி காரணமாக 1,825 குடும்பங்களைச் சேர்ந்த 6,583 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.
வரட்சியான காலநிலை காரணமாக வவுனியா பிரதேச செயலக பிரிவில் 238 குடும்பங்களைச் சேர்ந்த 720 பேரும், வவுனியா தெற்கு பிரதேச செயலக பிரிவில் 78 குடும்பங்களைச் சேர்ந்த 257 பேரும், வவுனியா வடக்கு பிரதேச செயலக பிரிவில் 115 குடும்பங்களைச் சேர்ந்த 446 பேரும், வெண்கல செட்டிகுளம் பிரதேச செயலக பிரிவில் 1394 குடும்பங்களைச் சேர்ந்த 5160 பேருமாக1825 குடும்பங்களைச் சேர்ந்த 6583 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வவுனியாவில் மழை இன்மை காரணமாக குளங்கள், கிணறுகளில் தண்ணீரின் மட்டம் குறைந்தளவில் காணப்படுகின்றது. இதனால் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மழை இன்மை தொடருமானால் மேலும் பல பகுதிகளில் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்படுவதற்கு வாய்ப்புக்கள் அதிகளவில் காணப்படுகின்றதாகவும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.