ஜப்பானில் கடும் வெப்பம் அனல்காற்று 65 பேர் பலி!

0
320


ஜப்பானில் நிலவும் கடும் வெயிலால் வீசும் அனல் காற்றுக்கு இதுவரை 65 பேர் பலியாகியுள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜப்பான் வானிலை ஆராய்ச்சி அமைப்பு இந்த அனல் காற்றை தேசிய பேரிடராக அறிவித்துள்ளது. ஜப்பானில் இதுவரை இல்லாத அளவிற்கு கடும் வெயிலுடனான காலநிலை நிலவுகிறது.
அதிகபட்சமாக குமகாயா என்ற இடத்தில் நேற்று முன்தினம் (23) 106 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது. ஜப்பான் வரலாற்றில் இதுவே அதிகபட்ச வெப்பநிலை என தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆகஸ்ட் மாத தொடக்கம் வரையில் அங்கு அதிகபட்சமாக 95 டிகிரி வெப்பநிலை தொடரும் என வானிலை ஆராய்ச்சி அமைப்பு கூறியுள்ளது.
அனல் காற்று வெயிலால் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.
கடும் வெயிலில் மயங்கி வீழ்ந்த 22,000 பேர் வரை மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here