ஐக்கிய தேசியக்கட்சியின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் இன்று சிறிலங்காவின்திட்டமிட்ட குற்றங்களை தடுக்கும் பொலிஸ் பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
யாழ் வீரசிங்கம்மண்டபத்தில் யூலை 2 ஆம் திகதி நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியிருந்த சிறுவர் மற்றும் மகளீர் விவகார முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீள உருவாக்க வேண்டும்என்று கூறியிருந்தார்.
இந்த உரைக்குஎதிராக தென்னிலங்கையைச் சேர்ந்த ஆளும் மற்றும் எதிர் கட்சிகள் கடும் எதிர்ப்பை வெளியிட்டதைஅடுத்து பெரும் சர்ச்சையைஏற்படுத்தியிருந்ததை அடுத்து சிறுவர் மற்றும் மகளீர் விவகார இராஜாங்க அமைச்சர்பதவியையும் இராஜினாமா செய்ய விஜயகலா மகேஸ்வரனுக்கு நேரிட்டது.
இந்த நிலையிலேயேகொழும்பிலுள்ள திட்டமிட்ட குற்றங்களை தடுக்கும் பொலிஸ் பிரிவினர் இன்றைய தினம்சர்ச்சைக்குறிய வீரசிங்கம் மண்டபம் உரை தொடர்பில் சுமார் மூன்றுமணித்தியலாங்களுக்கு மேல் விசாரணை நடத்தியிருக்கின்றனர்.
இதேவேளை தமிழீழவிடுதலைப் புலிகளை மீள உருவாக்க வேண்டும் என்று கூறியதற்காக அவரது நாடாளுமன்றஉறுப்பினர் பதவியையும் பறிக்க வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியஅமைப்பாளரான நவீன் திஸாநாயக்க உள்ளிட்ட ஐக்கிய தேசியக் கட்சியினர் வலியுறுத்திவருகின்றனர்.
அது மாத்திரமன்றிஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரான கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம்தலைமையிலான விசேட குழுவொன்றும் விஜயகலா மகேஸ்வரனின் உரை தொடர்பில் கட்சிமட்டத்திலான விசாரணையொன்றையும் ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.