ராமாயணம், மகாபாரதம் போன்றவை இந்த உலகில் தர்மத்தை எடுத்தியம்புகின்ற இதி காசங்களாகும்.
அதிலும் குறிப்பாக மகாபாரதப் போர் சகோ தரர்களுக்கிடையில் ஏற்பட்ட ஒற்றுமையீனத் தால் நடந்த யுத்தத்தை விபரிப்பது.
பாண்டவர்கள் தர்மத்தின் பக்கமாகவும் கெளரவர்கள் அதர்மத்தின் பக்கமாகவும் நிற் கின்றனர்.
இன்றிருக்கக்கூடிய இளைஞர்கள் மகா பாரதப் போரின் நிகழ்வை முழுமையாக உள் வாங்கத் தவறியிருந்தால், பாகுபலி படத்தை நினைவுபடுத்திக் கொண்டால் அதுபோதும்.
பாகுபலி படத்தின் கதை, அமைப்பு என்பன மகாபாரதத்தை தழுவியது என்ற செய்தியை மட்டும் இவ்விடத்தில் பதிவு செய்து கொள்கிறோம்.
இப்போது மகாபாரதத்தின் பக்கம் வாருங்கள். திருதராட்டிரனின் பிள்ளைகள் நூற்றொரு வர். அவர்களில் தலைமகன் துரியோதனன்.
பாண்டுவுக்குப் பஞ்சபுதல்வர்கள். இவர்கள் பஞ்சபாண்டவர்கள் என்று அழைக்கப்பட்டனர். இவர்களில் தலைமகன் தருமர்.
திருதராட்டிரனும் பாண்டுவும் உடன்பிறந்த வர்கள். இவர்களின் பிள்ளைகளான கெளர வர்களும் பாண்டவர்களும் ஒன்றுவிட்ட சகோ தரர்கள்.
துரியோதனனின் தந்தை திருதராட்டிரன் பிறப்பிலேயே கண் பார்வையை இழந்ததன் காரணமாக பாண்டுவிடம் ஆட்சி வருகிறது.
பாண்டு இறந்துபோக, அதன் வழி ஆட்சி பஞ்சபாண்டவர்களுக்கு வந்தாக வேண்டும். ஆனால் இங்குதான் பதவி ஆசை முளைக்கி றது.
பஞ்சபாண்டவர்களிடம் ஆட்சியை ஒப்ப டைக்க துரியோதனன் மறுக்கிறான். தானே ஆளவேண்டும் என்பது அவனின் பிடிவாதம்.
இருந்தும் அவனுக்குப் புத்திமதி கூற சபை யில் இருந்த பேராளர்கள் தவறிவிடுகின்றனர்.
மெளனமாக இருப்பதையே அவர்கள் வலிந்து கடைப்பிடித்தனர். இவ்வாறு இவர் கள் மெளனமாக இருந்ததன் பின்னணியில் துரியோதனனின் ஆணவமும் கோபமும் மற்ற வர்களை மதித்துக் கதையாத சர்வாதிகாரத் தனமும் இருந்தன என்பதைக் கூறித்தானாக வேண்டும்.
இருந்தும் துரியோதனனுக்கு அறத்தை எடுத்துக்கூறி, துரியோதனனை வழிப்படுத்து கின்ற தார்மீகப் பொறுப்பு அவன் தந்தையாகிய திருதராட்டிரனையே சாரும்.
எனினும் அதனைச் செய்வதில் திருதராட்டி ரன் மெளனம் காத்தான்.
இதன்விளைவாக குருசேத்திரத்தில் பார தப் போர் நடந்தது. திருதராட்டிரனின் புத்திரர் கள் அழிந்து போயினர்.
சிங்கம் போல கர்ச்சித்த துரியோதனன் போர்க்களத்தில் இறந்து கிடக்கிறான்.
என்ன செய்வது தன் மகன் அதர்மம் செய் கிறான் என்பதைத் தெரிந்திருந்தும் திருதராட்டி ரன் மெளனமாக இருந்ததால், வயோதிப காலத்தில் இழப்பின் வலியோடு வாழவேண்டிய தாயிற்று.
இதை நாம் கூறும்போது எதற்காக இது வென்று நீங்கள் கேட்டால், வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் சிலர் துரியோதனன் போல நடந்து கொள்கின்றனர்.
இதனைக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தர் திருதராட்டிரன் போல பார்த்துக் கொண்டு; தனக்கு எதுவும் தெரியாதது போல மெளனமாக இருக்கிறார்.
இதன்விளைவு அங்கு நடந்ததாகவே இங்கும் அமையும் என்பதைக் கூறுவதற்காகத் தான் அக்கதையைக் கூறினோம், அவ்வளவுதான்.
(வலம்புரி)