நல்லூரில் பனை எழுச்சி வாரம் -கண்காட்சி !

0
509

வடக்கு மாகாண பனை எழுச்சி வாரம் கண்காட்சியும் விற்பனையும் நிகழ்வும் இன்று (22) நல்லூர் சங்கிலியன் பூங்கா வளாகத்தில் ஆரம்பமாகியுள்ளது.
இங்கு வடக்கு மாகாணத்தில் உள்ள பனை சார் கூட்டறவுச் சங்கங்களின் உற்பத்தி பொருட்கள் காட்சிப் படுத்தப்பட்டன.
எதிர்வரும் 28ஆம் திகதி வரை கண்காட்சியும் விற்பனையும் நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்வில் பனை சாந்த எண்ணக்கருக்கள் அடங்கிய ‘தாலம்’ என்ற நூல் வெளியிடப்பட்டது.
மாகாண கூட்டுறவு ஆணையாளர் பொ.வாகீசன் நூலினை வெளியீட்டு வைக்க மாகாண கூட்டுறவு அமைச்சர் அனந்தி சசிதரன் முதலாவது பிரதியை பெற்றுக்கொண்டார்.
நிகழ்வில் கூட்டுறவு சங்க பிரதி நிதிகள் ,பனை அபிவிருத்தி சபையின் அதிகாரிகள்,பனை தென்னை கூட்டுறவுச் சங்க அதிகாரிகள் உட்பட எனப் பலர் கலந்து கொண்டனர்.

 

 

             

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here