போருக்குப் பின்னரான சூழலில் பெண்களின் தலைமைத்துவம் மற்றும் வலுவூட்டல் என்ற தலைப்பிலான பன்னாட்டுப் பெண்கள் மகாநாடு யாழ்ப்பாணம் பொது நூலக கேட்போர் கூடத்தில் இன்று காலை ஆரம்பமானது.
மாணவிகளின் நடன நிகழ்வுடன் ஆரம்பமானமாநாட்டில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பதில் துணைவேந்தர் சுதாகரன், மாவட்டச் செயலர் நாகலிங்கம் வேதநாயகன் மற்றும் மேலதிக மாவட்டச் செயலர் சுகுணரதி தெய்வேந்திரம் உட்பட துறை சார்ந்த பெண்கள் பலர் கலந்து கொண்டனர்.
மாநாட்டில் பெண்கள் தொடர்பான ஆய்வுகள் சமர்ப்பிக்கப்பட்டு விவாதிக்கப்படுவதோடு, எதிர்காலத்தில் பெண்கள் தொடர்பான அபிவிருத்தித்திட்டங்கள் மற்றும் கொள்கைவகுப்பிற்கான முன்மொழிவுகளும் முன்வைக்கப்படவுள்ளன.
நிகழ்வில் நடனமாடிய பாடசாலை மாணவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
விருந்தினர்களுக்கு மாநட்டினை நினைவுகூறும் நினைவுச் சின்னங்களும் வழங்கப்பட்டன. இந்த மாநாடு நாளையும் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.