வடமாகாணத்தில் படையினர் தொடர்ந்திருக்க வேண்டிய எந்த அவசியமும் இல்லை!

0
178

வடக்கில் சிறீலங்கா இராணுவத்தினர் வசமிருந்த 92 சதவீத காணிகளை விடுவித்து விட்டதாக சிறீலங்கா இராணுவம் குறிப்பிடுவது உண்மைக்கு புறம்பானதாகவே காணப்படுகின்றது. காணி விடுவிப்பு விவகாரத்தில் அரசாங்கம் தொடர்ந்து மந்தகரமாகவே செயற்பட்டு வருகின்றது.
மக்கள் மத்தியில் அச்சுறுத்தல்களை ஏற்படுத்தி வெறுமனமே பாதுகாப்பு என்று குறிப்பிட்ட மக்களின் பூர்வீக காணிகளை அடிப்படையாக கொண்டு வருவாய் தேடுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது எனவும் தெரிவித்தார்.
வட மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் இன்று விடுத்துள்ள கேள்வி பதில்களிளே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
வடக்கு மாகாணம் தனித்து செயற்பட்டதை தொடர்ந்து அதாவது 2013 கடைசியில் வலிகாமம் வடக்கில் சுமார் 6500 ஏக்கர் மக்கள் காணி சிறீலங்கா இராணுவத்தினர் கைவசம் இருந்தது.
இப்பொழுது அவற்றில் பாதியளவு பங்கினையே பகுதி பகுதியாக அதை 92 சதவிகிதம் என்று கூறுவது தாங்கள் 2009இல் கைவசம் வைத்திருந்த காணிகளின் விகிதாசார அடிப்படையில் தற்போது 8 சதவிகிதமே மிகுதி உள்ளதென்பதையே அவர்கள் கூறுகின்றார்கள். இது யாழ் மாவட்டத்தில் வலிகாமம் வடக்கில் மட்டுமே.
65,000 ஏக்கர் காணிகளை வடமாகாணம் முழுவதிலும் படையினர் கையகப்படுத்தி வைத்திருந்தார்கள். அவற்றுள் பெரும்பான்மை அரச காணிகள். அவற்றைப் பற்றி எதுவும் கூறாமல் 92 சதவிகிதம் கையளித்து விட்டதாகக் கூறுவதன் அர்த்தம் அரச காணிகளைத் தாம் தான்தோன்றித்தனமாய் ஆயிரம் வருடங்களுக்கு தொடர்ந்து வைத்திருக்கலாம் என்ற எண்ணத்தில். சுமார் 60,000 ஏக்கர் வடமாகாணக் காணிகள் இப்பொழுதும் படையினர் வசம் இருக்கின்றன என்பதே எமக்குத் தரப்பட்ட ஏற்றுக் கொள்ளக்கூடிய புள்ளி விபரங்கள்.
இவ்விடயம் தொடர்பில் தகவல்களை ,சேகரிப்பதென்றாலும் அவை அந் நிறுவனங்களின் தலைமை அதிகாரியின் அனுமதியுடனேயே நடைபெற வேண்டும்.
சுய விருப்பின் பெயரில் பாதுகாப்பு என்ற அடிப்படையில் எதுவும் கேட்க முடியாது. அதற்கு சட்டம் இடம்கொடுக்காது. பாதுகாப்பு என்ற போர்வையில் பலவிதமான அட்டூழியங்களைப் படையினர் இதுவரையிலும் புரிந்துள்ளார்கள்.
போர்க்குற்றங்கள் அவற்றுள் அடங்குகின்றன. எனவே இவ்வாறான தருணங்களில் பாதுகாப்பு படையினரின் முறையற்ற நடவடிக்கைகளை மக்களுக்கு எடுத்துரைப்பது அவசியம்.
போலியாக பாதுகாப்பென்று மக்களின் காணிகளைப் பிடித்துக் கொண்டும் வருவாயை எடுத்துக்கொண்டிருப்பதை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம். அத்துடன் இவர்கள் தாம் நினைத்தவாறு வைத்தியசாலையினுள் நுழைந்து தரவுகள் சேகரித்தால் பொலிஸாரின் அதிகாரங்களை படையினர் கைவசப்படுத்தியதாக அமையும்.
உண்மையில் இராணுவத்தினர் இவ்வாறான புள்ளி விபரங்களை வைத்தியசாலைகளிலிருந்து சேகரிக்க வேண்டுமென்றால் காவல்துறையினரை நாடி அவர்கள் ஊடாகவே இதைச் செய்ய வேண்டும். இராணுவத்தினருக்குப் போர்க்காலம் போல் இப்பொழுதும் அதிகாரங்கள் இருப்பதாக நினைப்பது தவறு.
உண்மையில் வடமாகாணத்தில் படையினர் தொடர்ந்திருக்க வேண்டிய எந்த அவசியமும் இல்லை. அரசியல் காரணங்களே அவர்களை இங்கு நிலை நிறுத்தியுள்ளன ஆகவே அரசாங்கம் காணி விடுவிப்பு விவகாரத்தில் தீர்மானங்களை முன்வைக்கும் போது அதனை வடக்கு மாகாண இராணுவ அதிகாரிகள் செயற்படுத்த பின்நிற்கின்றனர்.
வடக்கு மாகாண மக்களின் பூர்வீக காணிகள் விரைவில் விடுவிக்கப்பட வேண்டும் அதுவே அரசியல் தீர்வின் ஒரு பகுதியாகவே காணப்படும் எனவட மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here