போதைப் பொருள் கடத்தல், பெண்கள் மீதான துன்புறுத்தல் உள்ளிட்ட குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்த முடியாமல் உள்ளது என சிறீலங்காவின் சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் மற்றும் காவல்துறை மா அதிபர் ஆகியோரிடம் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
காவல்துறையினருக்கும் குற்றச்செயல்களில் ஈடுபடுவோருக்கும் இடையே நெருங்கிய தொடர்புள்ளது என தன்னால் தெரிவிக்கப்பட்டதாகவும், அதனை காவல்துறை மா அதிபர் ஏற்றுக்கொண்டதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்துக்கு 2 நாள் பயணமாக வருகை தந்த சிறீலங்காவின் சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார, பிரதி அமைச்சர் நளின் பண்டார மற்றும் காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோர் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை சந்தித்து பேச்சு நடத்தினர்.
இந்தச் சந்திப்பு கைதடியிலுள்ள வடக்கு மாகாண முதலமைச்சரின் அலுவலகத்தில் இடம்பெற்றது. சந்திப்பின் நிறைவில் செய்தியாளர்களிடம் முதலமைச்சர் கருத்துத் தெரிவித்தார்.
குற்றச் செயல்கள் அதிகரிக்கின்றன. அவற்றை கட்டுப்படுத்த காவல்துறையில் ஆளணிப் பற்றாக்குறை உள்ளது. தமிழ் காவல்துறை உத்தியோகத்தர்கள் நியமிக்கப்படவேண்டும்.
பெண் காவல்துறை உத்தியோகத்தர்களுக்கும் பற்றாக்குறை உள்ளது என்று காவல்துறை மா அதிபரிடம் எடுத்துக் கூறியதாக வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் மேலும் தெரிவித்துள்ளார்.
Home
ஈழச்செய்திகள் காவல்துறையினருக்கும் குற்றச்செயல்களில் ஈடுபடுவோருக்கும் இடையே நெருங்கிய தொடர்புள்ளது