சிறீலங்கா இராணுவத்தினர் ஒல்லாந்த கோட்டையில் நிரந்தர முகாமிடுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது !

0
191


யாழ்ப்பாணம் ஒல்லாந்த கோட்டையில் சிறீலங்கா இராணுவத்தினர் முகாமிடுவதனை ஏற்றுக்கொள்ளமாட்டேன். இராணுவத்தினர் வடமாகாணத்தில் இருந்து வெளியேறுவார்கள் எனின், தற்காலிகமாக இராணுவத்தினரை ஒல்லாந்த கோட்டையில் வைத்திருக்கலாமே தவிர, நிரந்தரமாக இராணுவத்தினர் முகாமிட ஒரு போதும் அனுமதிக்க முடியாது என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் ஒல்லாந்த கோட்டையில் சிறீலங்கா இராணுவத்தினர் முகாமிட அனுமதிக்கக் கூடாது என மக்களால் பல போராட்டங்கள் முன்னெடுக்கப் பட்டுவரும் நிலையில், ஒல்லாந்த கோட்டையை சிறீலங்காஇராணுவத்தினருக்கு வழங்குவது தொடர்பில் முதலமைச்சரிடம் கேட்ட போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
யாழ். ஒல்லாந்தர் கோட்டையை இராணுவத்திற்கு கொடுப்பததென்ற விடயம் சட்டமாக வரவில்லை. ஆனால், பலராலும் பேசப்படுகின்றது. வடமாகாண ஆளுநர் தான் இந்த விடயத்தினை ஆரம்பித்து வைத்தவர். அவ்வாறு சிறீலங்கா இராணுவத்திற்கு ஒல்லாந்த கோட்டையைக் கொடுக்க வேண்டுமாயின் யாழ். மாநகர சபையிடம் அனுமதி கோரவேண்டும்.
வடமாகாணத்தில் இருந்து சிறீலங்காஇராணுவம் வெளியேறுவார்கள் எனின், தற்காலிகமாக அவர்களை ஒல்லாந்த கோட்டையில் வைத்திருக்கலாமே தவிர, நிரந்தரமாக முகாமிட அனுமதிக்க முடியாது.
ஒல்லாந்த கோட்டை தொல்பொருள் சின்னம் என்பதனால், அங்கு படையினரை முகாமிட அனுமதித்தால், பாதிப்புக்களை எதிர்நோக்க நேரிடும் என்ற பிரச்சினையும் உள்ளது.
வடமாகாண சபை சுற்றுலா மையம் ஒன்றினை அமைக்க கோரிய போது, தொல்பொருள் ஆராய்ச்சி திணைக்களம் எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர். ஆனால், படையினர் வரும்போது, ஏன் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை என்பதும் புரியவில்லை.
சுற்றுலா மையம் அமைக்க கேட்ட போது அனுமதிக்காத தொல்பொருள் திணைக்களம், இராணுவத்தினருக்கு ஒல்லாந்த கோட்டையை கொடுப்பது மனவருத்தத்தினை தருகின்றது. இவ்வாறு தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here