1995ஆம் ஆண்டு முன்னோக்கிப் பாய்தல் இராணுவ நடவடிக்கையினால், நவாலியில் மக்கள் தஞ்சமடைந்திருந்த தேவாலயத்தின் மீது சிறீலங்கா வான்படையின் வானூர்தி 13 குண்டுகளைத் தொடர்ச் சியாக அந்த மக்கள் மீதும், அவர்கள் தஞ்சமடைந்திருந்த ஆலயங்கள் மீதும் வீசியது.
சிறீலங்கா கொலைவெறி வான்படையின் இந்தக் குண்டுவீச்சில், சிறுவர்கள், இளைஞர்கள், முதியவர்கள், பணியாளர்கள் எனப் பலரும் துடிதுடித்து ஒரு நொடிப் பொழுதில் சாவைத் தழுவிய கொடூரம் அரங்கேறியது.
இந்தத் தாக்குதலில் சாவைத் தழுவியோர் நினைவாக, நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலயத்திலும், நவாலி சின்னக் கதிர்காமம் முருகன் ஆலயத்திலும் இன்று சிறப்புப் பூசை வழிபாடுகள் நடைபெறவுள்ளன. நவாலிப் படுகொலை சின்னங்களிலும் ஞாபகர்த்த ஒளியேற்றப்படும்.