காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் நல்லூரில் போராட்டம் !

0
471

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நடத்திவரும் தொடர்போராட்டம் 500ஆவது நாளை எட்டியுள்ளதைமுன்னிட்டு அவர்கள் நல்லூரில் இன்று (07) உணவு ஒறுப்புப் போராட்டம் முன்னெடுத்துள்ளனர்.
தமது போராட்டம் 500ஆவது நாளை எட்டியுள்ளது. எந்தத் தீர்வும் வழங்கப்படவில்லை. தமது போராட்டத்தை உலகுக்கு எடுத்துக் காட்டும் வகையில் நல்லூரின் முன்பாகப் போராட்டம் நடத்துகின்றோம் என்று காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர்.
காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் சிறீலங்கா அரசு உரிய பதிலை வெளியிட வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here