தொல்லியல் திணைக்கள விதிமுறைகளை முற்றாக உதாசீனம் செய்யும்வகையில் தொல்பொருள் திணைக்களத்தின் அதிகாரிகளினால் யாழ்.கோட்டைப் பகுதியில் 6 ஏக்கர் காணி இராணுவத்தினரின் பயன்பாட்டுக்கென வழங்கப்பட்டுள்ளது.
குறித்த காணியில் பாரிய இராணுவ முகாம் ஒன்றினை அமைப்பதற்கு இராணுவத்தினர் அரசாங்கத்திற்கு விடுக்கப்பட்ட வேண்டுகோளினையடுத்து அரசாங்கத்தின் உத்தரவிற்கு அமைய யாழ் கோட்டையின் ஒரு பகுதி இராணுவத்திற்கு தொல்லியல் திணைக்களத்தினரால் வளங்கப்பட்டள்ளதாக தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் தொல்லியல்திணக்கத்தில் பணியாற்றும் தமிழ் அதிகாரி ஒருவரிடம் தொடர்புகொண்டு கேட்டபோது.
குறித்த விடயத்தை உறுதிப்படுத்திய அவர், தொல்லியல் திணைக்களத்தின் சட்டங்கள் உறுதியாகப் பேணப்படணே்டும் எனக் கூறப்படுகின்றபோதிலும் யாழிலுள்ள தொல்லியல் திணைக்கள சிங்கள அதிகாரிகள் இராணுவத்திற்கு பல்வெறு சந்தர்ப்பங்களில் இடமளித்துவருவதாக குற்றஞ்சாட்டினார்.
தொல்லியல் பிரதேசமாக அடையாளப்படுத்தப்பட்ட இடம் ஒன்றினை இராணுவத்திற்கோ வேறு யாருக்கோ கூட வழங்கமுடியாது என்ற நிலையில் இராணுவ முகாம் அமைக்க வழங்கப்பட்டிருப்பது தான்தோன்றித்தனமான செயற்பாடு எனவும் விசனம் வெளியிட்டார்.
இதேவேளை கடந்த வெசக் நிகழ்வின்போதும் யாழ் கோட்டைப் பகுதியினுள் தொல்லியல் விதிகளை மீறி இராணுவத்தினர் வெசக் வலயம் அமைப்பதற்காக றில்லர்கள் மூலம் பாரிய துளைகள் இடுவதற்கு அனுமதியளித்ததாவும் குறிப்பிட்டார்.
இதேவேளை தமிழர் பிரதேசங்களில் தொல்லியல் மரபுச்சின்னங்களின் பாதுகாப்புக் குறித்தும் மரபு உரிமைகள் மீறப்பவது குறித்தும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களோ தமிழ் அரசியல் தரப்புக்களோ அக்கறை காட்டாது அசண்டையீனமாக நடந்துகொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.