தபால் ஊழியர்கள் முன்னெடுத்துள்ள பணிப்புறக்கணிப்பு காரணமாக தேங்கியுள்ள தபால்கள் தொடர்பில் விசேட நடவடிக்கை முன்னெடுக்கவுள்ளதாக தபால் அமைச்சர் அப்துல் ஹலீம் தெரிவித்தார்.
தபால் ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு காரணமாக உள்நாட்டு மற்றும் வௌிநாட்டு தபால்கள் தேங்கியுள்ளதாக தபால் அமைச்சர் தெரிவித்தார்.
ஊழியர்களின் கோரிக்கை தொடர்பில் நாளை தீர்வு பெற்றுக்கொடுக்க முடியும் என எதிர்பார்ப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
இதேவேளை, தங்களின் கோரிக்கைக்கு தீர்வு பெற்றுத்தரும் வரை தங்களின் பணிப்புறக்கணிப்பு தொடரும் என ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
ஊழியர்களை சேவையில் இணைத்துக்கொள்ளும் நடைமுறைக்கு எதிர்ப்புத் தெரிவித்து தபால் தொழிற்சங்கங்கள் இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.