மத்திய தரைக்கடல் வாயிலாக ஆபிரிக்காவிலிருந்து ஐரோப்பாவிற்கு செல்லமுயன்ற கிட்டத்தட்ட 800 புகலிடக் கோரிக்கையாளர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக ஸ்பெயின் கடலோரக் காவற்படை தெரிவித்துள்ளது.
மொத்தமாக 3 படகுகளில் சென்ற இவர்களே ஸ்பெயின் கடலோரக் காவற்படையினரால் மீட்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் அதிகமானவர்கள் வட ஆபிரிக்கா, ஸ்பெயினின் மல்லோர்கா தீபகற்பத்திலும் ஏனையவர்கள் ஆபிரிக்காவின் மேற்குப் பகுதியிலிருந்தும் மீட்கப்பட்டதாகக் கூறப்படுகின்றது.
அதேநேரம், கடந்த சில மாதங்களாக ஆபிரிக்காவுக்குள் நுழைந்த அகதிகளுக்காக செயற்பட்டதைத் தொடர்ந்து ஸ்பெய்ன் பிரபலமாகிவிட்டதாகவும் கூறப்படுகின்றது.
கடந்த ஆண்டு ஜனவரி முதல் ஏப்ரல் வரையான காலப்பகுதியில் மட்டும் புகலிடக் கோரிக்கை யாளர்கள் 3,326 பேர் ஐரோப்பாவிற்கு செல்ல முயற்சித்துள்ளதாக அகதிகளுக்கான முகவர் நிலையம் தெரிவித்துள்ளது.