பாதுகாப்பு படைகளின் முன்னாள் பிரதம அதிகாரியான சரத் பொன்சேகாவை, பீல்ட் மார்ஷலாக மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவியேற்றார்.
பாதுகாப்பு அமைச்சின் விமான தளத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
1970ஆம் ஆண்டில் கெடட் உத்தியோகத்தராக இராணுவத்தில் இணைந்துகொண்ட சரத் பொன்சேகா, 2009 ஆம் ஆண்டில் பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரியாக இராணுவத்திலிருந்து ஓய்வுபெற்றார்.
சுமார் 30 வருடகால யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட காலப்பகுதியில் இராணுவத் தளபதியாக சரத் பொன்சேகா கடமையாற்றியிருந்தார்.
ஒருபோதும் ஓய்வுபெறாத பதவிநிலையான பீல்ட் மார்ஷல் பதவியானது, அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் ஒருவருக்கு சமமானதாகும்.
நாடொன்றின் முப்படையில் உயரிய பதவியாக பீல்ட் மார்ஷல் பதவி கருதப்படுகின்றது.
இந்த உயரிய பதவியான பீல்ட் மார்ஷல் பதவி உயர்வு நிகழ்வை முன்னிட்டு, மைத்திரிபால சிறிசேன சரத் பொன்சேகாவிற்கு விசேட அடையாள சின்னமொன்றையும் கையளிக்கவுள்ளார்.