முல்லைத்தீவு மாவட்டத்தின் நன்னீர் மீன்பிடிக்குரிய நந்திக்கடல் மற்றும் நாயாறு நீரேரிகள் என்பன முழுமையாக வனஜீவராசிகள் திணைக்களத்துக்குச் சொந்தமாக்கப்பட்டுள்ளன. சுமார் 21 ஆயிரத்து 265 ஏக்கர் நிலப் பரப்பு வன ஜீவராசிகள் திணைக்களத்தால் இயற்கை ஒதுக்கிடமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இயற்கை ஒதுக்கிடமாக அறிவிக்கப்பட்ட பிரதேசத்தினுள் மனிதர்கள் பிரவேசிப்பது குற்றமாகும்.
இரண்டு நீரேரிகளிலும் தொழில் நடவ டிக்கையில் ஈடுபட்டிருந்த சுமார் 9 ஆயிரம் குடும்பங்க ளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் வனஜீவராசிகள் திணைக்களத்துக்குச் சொந்தமான நிலப் பரப்புக்களை உள்ளடக்கிய அரசிதழ் அறிவித்தல் 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 24ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ளது.
நந்திக் கடல் இயற்கை ஒதுக்கிடம் , நாயாறு இயற்கை ஒதுக்கிடம் என்று இரண்டு பிரதேசங்க ளும் வனஜீவராசிகள் திணைக்களத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன.
நந்திக் கடல் இயற்கை ஒதுக்கிடத்துக்காக 10 ஆயிரத்து 234 ஏக்கரும்இ நாயாறு இயற்கை ஒதுக்கிடத்துக்காக 11 ஆயிரத்து 31 ஏக்கருக்கும் உள்வாங்கப்பட்டுள்ளது.
நந்திக்கடலை நம்பி 5 ஆயிரம் குடும்பங்களும்இ நாயாற்றை நம்பி 4 ஆயிரம் குடும்பங்களும் தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன. இரண்டு நீரேரிகளும் நன்னீர் மீன்பிடியாளர்களின் வாழ்வாதாரத்துக்குரியவையாகும்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் நன்னீர் மீன்பிடியில் பிரதான இடம் பிடிப்பது நந்திக்கடல் நீரேரியாகும். இந்த நீரேரியில் சுமார் 5 ஆயிரம் குடும்பங்கள் வீச்சுத் தொழில் செய்து மீன்பிடியில் ஈடுபடுகின்றன. அத்துடன் இறால் பிடிப்பும் இந்தப் பகுதியிலேயே இடம்பெறுகின்றது. முல்லைத்தீவு மாவட்டத்தின் பொருளாதாரத்தின் ஆணிவேராக நந்திக்கடல் மீன்பிடியே விளங்குகின்றது.
நாயாற்றுக் கடல் நீரேரியை நம்பி குமுழமுனைஇ அளம்பில்இ ஆறுமுகத்தான்குளம்இ தங்கபுரம்இ செம்மலை ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தொழில் செய்து வருகின்றனர். இங்கு தூண்டில் தொழில் பிரதானமாகும். நந்திக் கடல் சிலவேளைகளில் வற்றினாலும் நாயாற்றுக் கடல் ஒருபோதும் வற்றியதில்லை.
நன்னீர் மீன்பிடியின் மூலாதாரமாக விளங்கும் நந்திக்கடல் மற்றும் நாயாறு என்பன வனஜீவராசிகள் திணைக்களத்தின் கீழ் செல்வதனால் முல்லைத்தீவு மாவட்டத்தின் பொருளாதாரம் பெரும் பாதிப்புக்குள்ளாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.