மாத்தறை நகரிலுள்ள நகைக் கடையொன்றில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபரான சாமர இந்திரஜித் என்பவர் இன்று அதிகாலை காவல்துறை துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் இடம்பெற முன்னர் தான் மறைத்து வைத்திருந்த பையொன்றை எடுப்பதற்கு சந்தேக நபரை மாத்தறை கிரல காட்டுப் பகுதிக்கு காவல்துறையினர் அழைத்துச் சென்றுள்ளனர். இதன்போது தனது பையிலிருந்த கைக்குண்டொன்றை காவல்துறையினர் மீது வீசத் தயாராகும் போது சந்தேக நபர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த சாமர இந்திரஜித் மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக சிறீலங்கா காவல்துறை ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.
வெயாங்கொடஇ மாளிகாதென்ன பிரதேசத்தைச் சேர்ந்த சாமர இந்திரஜித் ஜயசுந்தர என்பவரே உயிரிழந்துள்ளார்.
குறித்த கொள்ளைச் சம்பவத்தில் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவரும் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.