யாழ் நாயன்மார் கட்டு வீடொன்றுக்குள் புகுந்து கும்பலொன்று அடாவடி!

0
267

நாயன்மார் கட்டில் வசிக்கும் சண்முகராஜா என்பவரின் வீட்டின் மீதே தாக்குதல் நடத்தப்பட்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் வீட்டு உரிமையாளர் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளதாவது:

கடந்த சில காலத்திற்கு முன்னர் யாழ்.பல்கலைகழகத்தின் முன்பாக எமது மகன் கடையொன்றை நடத்தி வந்தார். அந்தக் கடை இனம்தெரியாத நபர்களால் தீக்கிரையாக்கப்பட்டது.

அதனை அடுத்து எமது மகன் வெளிநாட்டில் சென்று தற்போது அங்கு வசித்து வருகின்றார். இந்தநிலையில் கடந்த ஓரிரு தினங்களுக்கு முன்பாக எமது வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் வந்த இனம்தெரியாத இருவர் எமது மகன் லோஜன் வெளிநாட்டால் வந்துவிட்டாரா ? எப்ப வருவார் ? என மிரட்டும் பாணியில் எம்மை விசாரித்து சென்று இருந்தனர்.

வியாழக்கிழமை இரவு எமது வீட்டுக்குள் புகுந்த கும்பல் எமது வீட்டு யன்னல் கண்ணாடிகள் மற்றும் கதவுகளை அடித்து உடைத்துவிட்டு எம்மை அச்சுறுத்தி சென்றனர் – என்று குறிப்பிட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸ் அவரச சேவை பிரிவுக்கு தொலைபேசி ஊடாக அறிவிக்கப்பட்டது. இன்று வெள்ளிகிழமை காலை சம்பவ இடத்துக்கு நேரில் சென்ற யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வீட்டிலுள்ளவர்களின் வாக்குமூலங்களை பதிவு செய்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here