மல்லாகம் பகுதியில் சுன்னாகம் பொலிஸாரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான நபரது சுவாசப்பை யினை குண்டானது துளைத்து சென்றமையால் சுவாசப்பை முற்றாக சேதமடைந்து அதனூடாக ஏற்பட்ட இரத்த பெருக்கினா லேயே குறித்த நபர் மரணமடைந்துள்ளதாக சட்ட வைத்திய அறிக்கையில் தெரிவிக்கப்பட் டுள்ளது.
நேற்று முன்தினம் மாலை 7 மணியள வில் மல்லாகம் சகாயா மாதா தேவாலயத் திற்கு அண்மையில் துப்பாக்கி சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றிருந்தது. இதில் துப்பாக்கி பிரயோகத்தினை சுன்னாகம் பொலிஸ் நிலையத்தை சேர்ந்த பொலிஸ் உத்தியோக த்தர் ஒருவரே மேற்கொண்டிருந்ததுடன் இதன் போது மல்லாகத்தை சேர்ந்த பாக்கியராஜா சுதர்சன் என்பவர் கொல்லப்பட்டிருந்தார்.
மரணத்திற்கான காரணம்
உயிரிழந்தவரது இடுப்பு கீழ் பகுதியில் இடது பக்கமாக துளைத்து சென்ற துப்பாக்கி குண் டானது அவரது இடது முன்பக்கமாக சுவாசப் பையை துளைத்து சென்றுள்ளது.
இதனால் சுவாசப் பையானது முற்றாக சேதமடைந்த மையால் அதனூடாக ஏற்பட்ட இரத்த பெரு க்கே மரணம் நிகழ்வதற்கான காரணமாகி யுள்ளது.
மேலும் குறித்த நபரது உடலில் மோதல் இடம்பெற்றதுக்கான சான்றுகள் இருப்பதாகவும் குறிப்பாக அவரது நெற்றிப் பகுதியில் அடி காயம் காணப்படுவதுடன் கண்ணின் கீழ் பகுதியிலும் காயமொன்று காணப்படுகின்றது.
இவை தவிர உடலின் தோள் மூட்டு பகுதி யில் கண்டல் காயங்களும், இடது பக்க கையில் துப்பாக்கி குண்டானது உராய்ந்து சென்ற காயமும் காணப்பட்டுள்ளது. அத்து டன் அவர் அணிந்திருந்த ரீ-சேட்டானது கிழிந்த நிலையில் காணப்பட்டிருந்ததாகவும் சட்ட வைத்திய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் உயிரிழந்த இளைஞனின் சடலம் உடற்கூற்று பரிசோதனையின் பின் நேற்றிரவு 7.15 மணியளவில் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை சட்ட மருத்துவ அதிகாரி மயூரன் முன்னி லையில் இளைஞனின் சடலம் உடற்கூற்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அத னையடுத்து சடலம் உறவினர்களிடம் ஒப்ப டைக்கப்பட்டது.
சம்பவம் இடம்பெற்று 24 மணி நேரங்க ளின் பின்னரே சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது. உடற்கூற்று பரிசோதனை தொடர்பான அறிக்கை மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் முன்வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.