ஆனந்த சுதாகரை உடனடியாக விடுதலை செய்ய முடியாது; மைத்திரி!

0
385

ஆனந்த சுதாகரை போன்ற மேலும் பல கைதிகள் இருப்பதனால் அவரை உடனடியாக விடுதலை செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக மைத்திரிபால சிறிசேன வடக்கு முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனிடம் தெரிவித்துள்ளார்.

நேற்று திங்கட்கிழமை கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்டிருந்த மைத்திரிபால சிறிசேனவை வடக்கு முதலமைச்சர் சந்தித்த போது ஆயுள் தண்டனை கைதியான ஆனந்த சுதாகரின் பிள்ளைகளின் நன்மை கருதி அவரை பொது மன்னிப்பில் விடுதலை செய்யுமாறு முதலமைச்சர் ஜனாதிபதியிடம் கோரிக்கையை முன்வைத்த நிலையிலேயே மைத்திரிபால இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது, ஆனந்த சுதாகரை போன்ற மேலும் பல கைதிகள் சிறைகளில் இருக்கின்றனர். இவரை விடுவிக்கும் போது மற்றையவர்களும் தங்களை விடுவிக்குமாறு கோர கூடும் என்பதனால் இவரை உடனடியாக விடுவிக்க முடியாதுள்ளதாக முதலமைச்சரிடம் மைத்திரிபால தெரிவித்துள்ளார்.

இதன் பின்னர் மைத்திரிக்கு கோரிக்கையொன்றை விடுத்த முதலமைச்சர் விக்னேஸ்வரன், அந்தப் பிள்ளைகளுக்கு தமது தந்தையை பார்வையிடக் கூடியவாறு அவரை அருகிலுள்ள சிறைச்சாலையொன்றுக்கு மாற்ற நடவடிக்கையெடுக்குமாறு கேட்டுக்கொண்டார். இதனைச் செய்வதற்கு நடவடிக்கையெடுப்பதாக மைத்திரிபால முதலமைச்சரிடம் உறுதியளித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here