தாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்து உயிரிழந்த மாணவனுக்கு நஷ்டஈடு!

0
140

தாமரை கோபுரத்தில் இருந்து கடந்த 8 ஆம் திகதி வீழ்ந்து உயிரிழந்த கிளிநொச்சி இளைஞனுக்கு 30 இலட்சம் ரூபாவினை ஒப்பந்த நிறுவனங்கள் நஷ்ட ஈடாக வழங்கியுள்ளன.

தாமரை கோபுரத்தின் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டிருந்த கிளிநொச்சி, அக்கராயன்குளத்தைச் சேர்ந்த கோணேஸ்வரன் நிதர்சன் எனும் மாணவன் கடந்த 8 ஆம் திகதி தாமரை கோபுரத்தின் 16 வது மாடியில் மின் தூக்கி பொருத்துவதற்காக விடப்பட்டிருந்து பகுதிக்குள் சென்று கீழே வீழ்ந்ததில் உயிரிழந்தார்.

சீனா மற்றும் இலங்கையை சேர்ந்த இரண்டு ஒப்பந்த நிறுவனங்கள் தாமரை கோபுரத்தின் கட்டுமானப் பணிகளில் ஈடுப்பட்டு வருகின்றன.

எனவே, உயிரிழந்த இளைஞனுக்கு குறித்த நிறுவனங்கள் இணைந்து காப்புறுதி பணம் மற்றும் நிறுவன பங்களிப்பு பணம் என 30 இலட்சம் ரூபாவினை வழங்கியுள்ளன.

குறித்த பணத்தை உயிரிழந்த நிதர்சனின் இரண்டு சகோதரிகள் மற்றும் சகோதரன் ஆகியோரின் பெயரில் நிலையான வைப்பில், வங்கியில் வைப்புச் செய்துள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

நிதர்சனின் குடும்பத்தினர் யுத்தத்தின் பின்னர் மீண்டும் கிளிநொச்சியில் மீள்குடியேறிய நிலையில், இதுவரை காலமும் அரசின் நிரந்தர வீட்டுத்திட்டம் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here