ஆப்கானிஸ்தானின் குனார் மாகாணத்தில் அமெரிக்க ஆளில்லா விமானங்கள் நடத்திய வான் தாக்குதலில் தாலிபன் அமைப்பின் பாகிஸ்தான் தலைவர் முல்லா ஃபஸ்லுல்லா கொல்லப்பட்டுள்ளதாக ஆஃப்கன் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானின் ஸ்வாத் பகுதியைச் சேர்ந்த முல்லா ஃபஸ்லுல்லா தீவிர மத போதகராவார். இவர் ஐந்து ஆண்டுகளுக்கு முன் பாகிஸ்தான் தாலிபன் அமைப்பின் தலைவர் பொறுப்பேற்றார்.
பாகிஸ்தான் முழுமைக்கும் ஷரியா சட்டத்தை அமல்படுத்த விரும்பிய இவர் இரக்கமற்ற தீவிரவாதியாக பார்க்கப்பட்டார்.
மலாலா யூசுஃப்சாய் சுடப்பட்ட சம்பவம் மற்றும் 130க்கும் அதிகமான மாணவர்கள் கொல்லப்பட்ட பெஷாவர் பள்ளித் தாக்குதல் ஆகியவற்றுக்கு உத்தரவிட்டதாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது.
இந்தத் தாக்குதலுக்கு ஆஃப்கன் படைகளும் பங்கேற்றன. தாலிபன் அமைப்பு இது குறித்து கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.