சிறையிலுள்ள எனது மகனை கருணைக் கொலை செய்து விடுங்கள் என ராஜீவ் காந்தி கொலையாளி பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகியோர் 27 ஆண்டுகளாக தண்டனை அனுபவித்து வருகிறனர்.
இந்த வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 3 பேருக்கு தூக்கு தண்டனையும் ஏனய 4 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது. பின்னர் 3 பேரின் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.
குறித்த 7 பேரையும் விடுதலை செய்யக்குாரி பல கோரிக்கைகள் விடுக்கப்பட்டன.
இதற்கிடையே, 7 பேரை விடுவிக்கக் கோரிய மனுவை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று நிராகரித்தார்.
இந்நிலையில், சிறையில் இருக்கும் எனது மகனை கருணைக் கொலை செய்து விடுங்கள் என ராஜீவ் கொலையாளி பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் கண்ணீர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் ஊடகவியளாலர்களிடம் குறிப்பிடுகையில், கடந்த 27 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் எனது மகனை வெளியில் கொண்டு வர பல்வேறு போராட்டங்கள் நடத்தி விட்டேன். ஆனாலும் எந்த பலனும் இல்லை.
அவனை சிறையில் இருந்து விடுவிக்க முடியாவிட்டால் கருணைக் கொலை செய்து விடுங்கள் என்று வலியுறுத்த உள்ளேன் என தெரிவித்துள்ளார்.