ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவின் மனைவியை அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் ஞானசார தேரரின் சட்டத்தரணியால், இன்றையதினம் (15) கொழும்பு மேல்நீதிமன்றில் மனு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கில், ஞானசார தேரருக்கு 06 மாதங்கள் ஒத்திவைக்கப்பட்ட ஒரு வருட கடூழிய சிறைத் தண்டனை வழங்கப்பட்ட போதிலும், தற்போது மேன்முறையீடு செய்துள்ளதால், சிறையில் கடின பணிகள் வழங்கப்படாது எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, நேற்றையதினம் (14) அவர் மருத்துவ பரிசோதனைக்கும் உட்படுத்தப்பட்டதாக சிறைச்சாலை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, ஞானசார தேரருக்கு ஜனாதிபதியின் பொது மன்னிப்பு வழங்குமாறு கோருவதாக, சிங்கள ராவய அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பில் அவ்வமைப்பின் பொதுச் செயலாளர் மாகல்கந்த சுதந்த தேரர் அறிவித்தலொன்றை விடுத்துள்ளார்.
பொதுபல சேனா அமைப்பின் செயலாளர்நாயகம், கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு 06 மாதம் ஒத்திவைக்கப்பட்ட ஒரு வருட கடூழிய சிறை விதிக்கப்பட்டுள்ளது.