வரலாற்றுச் சிறப்புமிகு நயினாதீவு அருள்மிகு ஶ்ரீ நாகபூசணி அம்பாள் ஆலய விளம்பி வருட உயர் திருவிழா 2018 இன்று (14.06.2018) வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.
இன்று கொடியேற்ற நிகழ்விற்கு தமிழர் தாயகத்தின் பெரும் பகுதிகளில் இருந்து அடியவர்கள் கலந்துகொண்டனர். இதற்கென போக்குவரத்து ஒழுங்குகளும் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளன.
தொடர்ந்தும் 15 தினங்கள் சிறப்புற இடம்பெறவுள்ள இவ்வாலய மஹோற்சவப் பெருவிழாவில் எதிர்வரும்- 26 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இரவு சப்பறத் திருவிழாவும், 27 ஆம் திகதி புதன்கிழமை காலை இரதோற்சவமும் மறுதினம் வியாழக்கிழமை காலை தீர்த்தோற்சவமும் நடைபெறவுள்ளன.