நுண்கடனுக்கு மாற்றுத் திட்டம் கோரி கிளிநொச்சியிலும் மன்னாரிலும் ஆர்ப்பாட்டம்!

0
179

நுண்கடன் திட்டங்களுக்கு மாற்று திட்டங்களை வழங்க கோரி கிளிநொச்சியில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கிளிநொ்சி கரடிபோக்கு சந்தியிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட ஊர்வலம், கிளிநொச்சி மாவட்டச் செயலகம் வரை சென்று அங்கு கவனவீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

நுண்கடன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மாற்று திட்டங்களை வங்கிகள் ஊடாக மக்களிற்கு வழங்க கோரியும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது மாவட்ட செயலகத்தில் மனு கையளிக்கப்பட்டது.

நுண் நிதிக் கடன் செயற்பாட்டின் பொறிக்குள் சிக்கியிருக்கும் மக்களை உடனடியாக விடுவிக்கக் கோரி, மன்னாரில் நேற்று இன்று கவனவீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மன்னார் மாவட்ட சிவில் சமூக அமைப்புக்கள் மற்றும் நல்லாட்சிக்கான பெண்கள் அமைப்பின் ஏற்பாட்டிலும்,மன்னார் மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் இணையத்தின் ஒருங்கிணைப்பிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மன்னார் தனியார் பேருந்துத் தரிப்பிடத்திற்கு முன் பேரணி ஆரம்பமாகி மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் நிறைவடைந்தது.

குறித்த பேரணியில் பெண்கள் அமைப்புக்கள்,பொது அமைப்புக்கள்,பொது மக்கள் என நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து மன்னார் மாவட்ட செயலகத்தின் பிரதம கணக்காளரிடம் மனுக் கையளிக்கப்பட்டது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here