உலகப் பெருந்தமிழர் இராமலிங்கம் நாகலிங்கம் அவர்கள்
தேசியத்தலைவர் அவர்களின் அன்பையும் பாராட்டையும் மதிப்பையும் பெற்ற உலகப் பெருந்தலைவர் இராமலிங்கம் நாகலிங்கம் ஐயா அவர்களின் பிரிவுச் செய்தி கேட்டு, மனங்கலங்கி நிற்கின்றோம்.
தங்களது தேசியப் பற்றாலும் தமிழ் உணர்வாலும் தாயகத்தில் தாங்கள் ஆற்றிய தமிழ்ப் பணியை புலம்பெயர் தேசமான ஜேர்மனியில் மிகச் சிறப்பாக முன்னெடுத்தீர்கள்!
ஜேர்மனியில் தமிழ்மொழியை வளர்ப்பதற்காக வித்திட்ட தங்களது நேர்த்தியான திட்டமிடல், ஆளுமைத்தன்மை, சிறந்த தலைமைத்துவம் போன்றவற்றால் ஜேர்மன் நாடு முழுவதும் பல தமிழ்க் கல்விக் கழகங்களை உருவாக்கினீர்கள்!
பல ஆயிரக்கணக்கான எம்சிறார்கள் தமிழ்மொழி, பண்பாடு, கலை, தமிழர் வரலாறு போன்றவற்றைக் கற்கவும் அதன்படி ஒழுகவும் வழிகாட்டி நின்றீர்கள்!
அத்தகைய தங்களது பிரிவு உலகத் தமிழருக்கே ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.
உலகப் பெருந்தமிழர் அமரர் இரா. நாகலிங்கம் அவர்களின் பிரிவால் துன்புறும் துணைவியார், பிள்ளைகள், உற்றார், உறவினர் அனைவருக்கும் எமது ஆழ்ந்த இரங்கலைத்; தெரிவித்துக்கொள்வதோடு துயரிலும் பங்கெடுத்துக்கொள்கின்றோம்.
‘புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்’
தமிழீழ விடுதலைப் புலிகள் – டென்மார்க் கிளை.