பிரான்சில் இயற்கை அனர்த்தத்திற்கு RER B தொடருந்து தடம்புரண்டது: 7 பேர் படுகாயம்!

0
1948

பிரான்சில் தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக மண்சரிவு ஏற்பட்டதில் RER B தொடரந்து பாதை உடைந்து, அதன் மேல் பயணம் செய்த தொடருந்து தடம்புரண்டு சேதமடைந்ததில் 7 பேர் படுகாயமடைந்தனர்.
இன்று செவ்வாய்க்கிழமை காலை  Essonne இல் Courcelles-sur Yvette இல் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
“ஒரு நிலச்சரிவு பாதையில் 3 சிற்றுந்துகளை வெள்ளம் தூக்கிச் சென்றது, இத்தகவலை பிரான்சின் போக்குவரத்து அமைச்சர் எலிசபெத் போர்னே தெரிவித்தார்.
மோசமான வானிலை காரணமாக, ஒரு கரையோரப் பகுதியில் தொடருந்து பாதை தகர்ந்தது. மற்றும் பாதையில் ஒரு பெரிய துளை ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து தொடருந்து போக்குவரத்தில் பெரும் தடங்கல் ஏற்பட்டது. காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ஏனைய பயணிகள் தொடருந்தில்  அனுப்பிவைக்கப்பட்டனர்.

https://youtu.be/LJEMr1Rs7Gk

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here