கண்ணீர் வணக்கம் உலகப் பெருந்தமிழர் இராமலிங்கம் நாகலிங்கம் அவர்களுக்கு!
தமிழுக்காய் உன் உயிரைத் தற்கொடை ஆக்கிய ஈழத்தமிழ்ப்பெருமகனே!
தாய்மொழியின்றி உலகத் தமிழருக்கு நல்வாழ்வில்லையென வாழ்ந்த சான்றோனே!
கரிகாலன் காட்டிய வழிதனில் கல்விப் பணியாற்றிய பெருந்தகையே!
கற்றதழிழை தமிழினத்தின் நெஞ்சில் விடுதலை மூச்சாய் விதைத்தவனே!
தாய்மொழியின் பற்றாளராய் உன் மாணவர்கள் தலைநிமிர்ந்து நிற்கிறார்கள்.
தமிழீழம் எங்கள் தேசம்மென்ற உணர்வோடு வீறுநடை போடுகிறார்கள்.
நீ விதைத்த தழிழ் விதைகள் விருட்சமாய் உலகெங்கும் வளரும்.
நீதிப்போர் நடாத்தி எம்தேச இறைமைகளை ஒரு நாள் மீட்கும்.
கண்ணீர் விட்டுக் கதறியள வேண்டாமென வழிகாட்டிச் சென்றுவிட்டாய்!
கடமையுணர்வோடு நீயாற்றிய பணியை அணையாத்தீயாய் எம்நெஞ்சில் ஏற்றிவிட்டாய்!
உன் பணியால் உலகெங்கும் தமிழ்மொழி நிலைத்து நிற்கும்.
உரிமைக்காய் குரல்கொடுக்க எம்சந்ததியின் நாவில் தமிழும் ஒலித்து நிற்கும்.
உயிருள்ளவரையும் உங்கள் மொழிப் பற்றை நாம் மறவோம்.
உங்கள் நினைவோடு தாய்மொழியின் பெருமையை உலகெங்கும் நாமுரைப்போம்.
உங்கள் உறவோடும் சுற்றத்தோடும் இணைந்து துயரத்தை பகிருகிறோம்.
உணர்வோடு நீங்கள் காட்டிய வழிதனில் கல்விப்பணியைத் தொடர்வோம்.
– மாலதி தமிழ் கலைக்கூடம்.