வடமாகாணத்தில் நுண்கடன் செயற்பாட்டினால் 59 க்கும் மேற்பட்டதற்கொலைகள் இடம்பெற்றுள்ளதுடன், தொடர்ந்தும் மக்கள் அசௌகரியங்களை எதிர்கொள்வதாக கிளிநொச்சி மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புக்களின் சம்மேளனத் தலைவர் அன்ரனி கலிஸ்சியஸ் தெரிவித்தார்.
நுண்கடன்களால் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் தொடர்பான ஊடக சந்திப்பொன்று நேற்று (08) கிளிநொச்சியில் நடைபெற்றுள்ளது.
இதில் கலந்து கொண்டு கருத்துத்தெரிவித்த சம்மேளனத்தின் தலைவர், வடமாகாணத்தில் மீள்குடியமர்வின் பின்னர் மக்களின் தேவைகளை நிறைவு செய்வதற்கு நுண்கடன்கள் உதவியாக இருந்தாலும் எதிர்காலத்தில் அதனூடாக பல அசெகரியங்களை மக்கள் எதிர்கொள்கின்றனர்.
வடமாகாணத்தில் இந்த நுண்கடன் செயற்பாடுகளினால் 59 இக்கும் மேற்பட்ட தற்கொலைகள் இடம்பெற்றிருக்கின்றன. இதேபோன்று கிழக்கு மாகாணத்தில் 19 வரையான தற்கொலைகள் இடம்பெற்றிருக்கின்றன.
இவ்வாறு நுண்கடன்களால் அன்றாடம் பல்வேறுபட்ட பிரச்சினைகள் உருவாகி வருகின்றன.
இது தொடர்பில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் பொருட்டு அதனடிப்படையில் வடமராட்சி கிழக்கு மக்களும், கடற்படை மற்றும் நீரியல்வளத்துறையினருக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.