தேங்காய் பறிப்பதற்காக தென்னை மரத்தில் ஏறியவர் தென்னை மட்டை முறிந்ததில் தவறி வீழ்ந்து படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் அங்கு உயிரிழந்தார்.
குறித்த சம்பவம் ஏழாலைப் பகுதியில் இன்று இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் ஏழாலை மயிலங்காட்டைச் சேர்ந்த சின்னவன் இரத்தினம் (வயது- 65) என்பவரே உயிரிழந்தவராவார்.
மேற்படி சம்பவம் தொடர்பில் தெரிய வருவது,
ஏழாலை கிழக்கில் உள்ள வீடொன்றில் இரண்டு தென்னைகளில் ஏறி தேங்காய் பறித்து விட்டு மூன்றாவது தென்னையில் ஏறியபோதே குறித்த நபர் தவறிவிழுந்துள்ளார்.
விழுந்து படுகாயமடைந்தவர் ஆபத்தான நிலையில் யாழ். போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டார். எனினும் அவர் இடைவழியில் உயிரிழந்துவிட்டார் என்று வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.