இயக்கச்சி விபத்து; 10 நாட்களின் பின் சிகிச்சை பலனின்றி இளைஞன்மரணம்!

0
144

மாட்டுடன் மோதுண்டு விபத்துக்குள்ளாகி படுகாயமடைந்த இளைஞர் ஒருவர் சிகிச்சை பலனின்றி 10 நாட்களின் பின்னர் உயிரிழந்துள்ளார்.

சுன்னாகம் இணுவிலை சேர்ந்த வைகுந்தநாதன் கௌசிகன் (வயது 27) என்ற இளைஞனே உயிரிழந்தவராவார்.
குறித்த இளைஞர் கடந்த 26 ஆம் திகதி தனது நண்பனை பார்ப்பதற்காக இயக்கச்சிக்கு சென்றுள்ளார்.

அன்றையதினம் மாலை நண்பனுடன் மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து பேருந்து தரிப்பிடத்துக்கு வரும் வழியில் மாட்டுக் கூட்டம் வீதியால் வந்துள்ளது. எதிரே வந்த மாட்டுடன் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் இருவரும் காயமடைந்து கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

மேலதிக சிகிச்சைக்காக குறித்த இளைஞர் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்த மரண விசாரணையை யாழ்.போதனா வைத்தியசாலை மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here