பளையில் குடியேற்றுவதை உடன் நடைமுறைப்படுத்துங்கள்!

0
686

காணி இல்லாதவர்களுக்கு பளைப் பிர தேசத்தில் காணிகளை வழங்கி அவர்களைக் குடியமர்த்த முடியும் என்ற தகவலை பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் நேற்று முன்தினம் யாழ்ப்பாண செயலகத்தில் நடந்த ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தெரிவித் துள்ளார்.

அவர் தெரிவித்த யோசனைக்கு இராஜா ங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ் வரன் அவர்களும் தனது உடன்பாட்டைத் தெரி வித்துள்ளார்.
காணி இல்லாதவர்களுக்கு பளையில் காணி வழங்க வேண்டும் என்ற சிறீதரன் எம்.பியின் முன்மொழிவு மிகவும் யதார்த்த மானது என்பதுடன் இப்படியான யோசனை களை முன்வைத்து அதனை நடைமுறைப் படுத்துவதே ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத் தின் இலக்காக இருக்க வேண்டும்.

அந்த இலக்கு மிக நீண்ட காலத்துக்குப் பின்னர் பேசுபடுபொருளாகியிருப்பது மன துக்கு ஆறுதலைத் தருகிறது.
பச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்கு உட்பட்ட பளைப் பிரதேசம் நிலவளம், நீர்வளம் நிறைந்த இடம்.

தென்னைச் செய்கைக்கு மிகவும் உகந்தது என்று கூறப்பட்டாலும் பொதுவில் விவசாயத் துக்கு உகந்த நிலமாக பளைப் பிரதேசத்தைக் கூறமுடியும்.
ஒரு காலத்தில் ஏக்கர் கணக்கில் தென்னந் தோட்டங்கள் இருந்த இப்பிரதேசம் இன்று காடுபத்திக் கிடப்பதைப் பார்க்கும்போது இதயம் கருகிக் கொள்ளும்.
கொடிய யுத்தம் தமிழர்களின் பொருளா தாரத்தை எவ்வாறு அழித்தொழித்தது என்ப தற்கு பளைப் பிரதேசம் தக்க சான்று.

யுத்தத்தால் அழிந்த பளைப் பிரதேசத்தில் மீண்டும் தென்னந்தோட்டங்களை உருவாக் கும் முயற்சிகள் நடப்பது மனதுக்கு ஆறுத லைத் தருகிறது.

கூடவே புலம்பெயர்ந்த எம் தமிழ் உறவு களுக்குச் சொந்தமான பல ஏக்கர் காணிகள் இன்னமும் திருத்தியமைக்கப்படாத நிலையில் இருப்பதையும் காணமுடிகிறது.

இதுதவிர, தமிழகத்து கோயில்களுக்குச் சொந்தம் என்று அடையாளப்படுத்தக் கூடிய நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலம் பளைப் பகுதியில் இருப்பதான தகவல்களும் உண்டு.
யாழ்ப்பாணத்துக்கும் கிளிநொச்சிக்கும் இடைப்பட்ட பிரதேசமாகவும் நன்னீரும் குளங் களும் நிறைந்த பகுதியாகவும் தொழிற்சாலை களும் நகர வசதிகளும் ஏற்படக்கூடியதும் உயர் கல்விப் பீடங்கள் அமையக் கூடியதுமான பளைப் பிரதேசத்தில்,

எங்கெல்லாம் அரச காணிகளும் தமிழகத் துக் கோயில்களுக்குச் சொந்தமான காணி களும் இருக்கின்றனவோ அவற்றையயல் லாம் யாருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் பெற்று அதனைக் காணியற்ற எம் மக்களுக்கு வழங்க வேண்டும்.
இதைச் செய்வதன் மூலம் எங்கள் நிலங் கள் எங்கள் மக்களுக்கே என்ற புதிய கோச த்தை நடைமுறைப்படுத்த முடியும்.
எனவே ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தை விரைந்து அமு லாக்க வேண்டும்.

(நன்றி:வலம்புரி)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here