ஆசிரியை ஒருவர் உயிரிழப்பு நடவடிக்கை எடுக்கக்கோரி கல்வி அமைச்சின் அலுவலகம்முன் போராட்டம்!

0
442

அதிபர் ஒருவரின் தொந்தரவு காரணமாக ஆசிரியை ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் உரிய விசாரணைகளை மேற் கொண்டு குற்றவாளிகள் மீது நட வடிக்கை எடுக்கக் கோரி நேற்றைய தினம் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் அலுவலகத்தின் முன் பாக பாடசாலை ஆசிரியர்கள் மற் றும் பொதுமக்கள் அரசியல் கட்சி கள் இணைந்து போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தன.

நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் நல் லூர் கிட்டு பூங்கா முன்பாக ஒன்று கூடிய ஆசிரியர்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் ஆகியோர் அங்கிருந்து ஊர்வல மாக வடக்கு மாகாண கல்வி அமைச்சின் அலுவலகத்திற்கு சென்று அங்கு அமைதி வழியில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.

தொடர்ந்து அலுவலகத்தில் அமைச்சர் இல்லாத காரணத்தால் அங்கிருந்து பொறு ப்பு வாய்ந்த அதிகாரி ஒருவரிடம் அமைச்ச ருக்கான மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டது. இந்த போராட்டத்தில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டி ருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here