சோமாலியாவில் இருந்து ஏமனுக்கு கடல் வழியாக அகதிகளாக சென்ற 46 பேர் கடலில் செல்லும் போது பாதி வழியில் மூழ்கி பலியாகி உள்ளனர். சோமாலியா போன்ற எத்தியோப்பியன் நாடுகளை சேர்ந்த மக்கள் வருடாவருடம் அரபு நாடுகளுக்கு கடல் வழியாக ரகசியமாக சென்று அகதிகளாக தஞ்சம் அடைவது உண்டு. அந்த நாட்டில் குடியுரிமைக்கு விண்ணப்பித்துவிட்டு சிறு சிறு வேலைகளை செய்வார்கள். ஒவ்வொரு மாதமும் 10000 பேர் வரை இப்படி பயணிப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது.
கடந்த வருடம் மட்டும் 100,000க்கும் அதிகமானோர் இப்படி கடல் மூலமாக அரபு நாடுகளில் தஞ்சம் அடைந்து இருக்கிறார்கள். ஏமன் அருகில் இருப்பதால், பலருக்கு அந்த நாடு முதல் தேர்வாக இருக்கும். இந்த நிலையில் சோமாலியாவில் இருந்து ஏமனுக்கு கடல் வழியாக அகதிகளாக சென்ற 46 பேர் கடலில் செல்லும் போது பாதி வழியில் மூழ்கி பலியாகி உள்ளனர். இன்னும் 54 பேரின் நிலை என்னவென்று தெரியவில்லை. இன்னும் 16 பேர் இறந்திருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. கடலில் மூழ்கி காணாமல் போனவர்களை அமெரிக்க கடற்படையும், ஏமன் கடற்படையும் தீவிரமாக தேடி வருகிறது.