வடக்கில் போருக்குப் பின் முளைத்த 131 விகாரைகள்!

0
420

வடக்கு மாகாணத்தில், 2009ஆம் ஆண்டு போர் முடிந்த பின்னர், 131 பௌத்த விகாரைகள் அமைக்கப்பட்டுள்ளன என்று வடமாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்தில் மாத்திரம் 67 விகாரைகள் அமைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பௌத்தர்கள் வாழாத வடக்கு மாகாணப் பகுதிகளில் திட்டமிட்டு பௌத்த விகாரைகள் அமைக்கப்பட்டு வருகின்றன, இதன்படி யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 6 விகாரைகளும், கிளிநொச்சி மாவட்டத்தில் 3 விகாரைகளும், மன்னார் மாவட்டத்தில் 20 விகாரைகளும், வவுனியா மாவட்டத்தில் 35 விகாரைகளும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 67 விகாரைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களில் போருக்கு பின்னர் திட்டமிட்ட சிங்கள குடியேற்றம் இடம்பெற்று வருகின்றமை இதன்மூலம் அமம்பலமாகின்றது, முல்லைத்தீவு மாவட்டத்தில் திட்டமிட்டவகையில் தமிழ் மக்களின் நிலங்களில் சிங்கள மக்கள் குடியேற்றப்படுகின்றனர்.

இதேவேளை, இது குறித்து தமிழ் தலைவர்கள் கண்டு கொள்ளாமல் இருப்பது குறித்து மக்கள் பெரும் ஆதங்கத்தில் இருக்கின்றனர். இனிமேலாவது வடமாகாணத்தில் மேற்கொள்ளப்படும் திட்டமிட்ட குடியேற்றங்களை நிறுத்துவதுடன் சேர்த்து பௌத்த மயமாக்கலையும் தடுப்பதற்கான நடவடிக்கைகளை அவர்கள் எடுக்கப்பட வேண்டியது கட்டாயமாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here