யாழ்.மருதங்கேணியில் அடாத்தாக தங்கியுள்ள தென்பகுதி மீனவர்களை வெளியேற்றக்கோரி வடமராட்சி கிழக்கு மற்றும் வடக்கு கடற்றொழிலாளர் சமாசங்களின் ஒழுங்கமைப்பில் நாளை வெள்ளிக்கிழமை யாழ்.மாவட்ட கடற்றொழில் நீரியல்வளத்துறை திணைக்களத்தை முற்கையிட்டு பாரிய மக்கள் போராட்டம் ஒன்றை நடத்துவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டிருக்கின்றது.
வடமராட்சி கிழக்கு பகுதியில் சுமார் 1500ற்கும் மேற்பட்ட கடற்றொழிலாளர்கள் அடாத்தாக தங்கியிருந்து கடலட்டை தொழில் செய்து வருகின்றனர். மேற்படி தென்பகுதி கடற்றொழிலாளர்களை வெளியேற்றக்கோரி வடமராட்சி கிழக்கு மீனவர்கள் தொடர்ச்சியாக கேட்டுவருவதுடன், நேற்றய தினம் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றையும் நடத்தியிருந்தனர்.
இந்த போராட்டத்தை தொடர்ந்து வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர் சமாசத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டிருக்கின்றது. நேற்றய தினம் காலை 10.30 மணி தொ டக்கம் நண்பகல் 12 மணிவரை கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது. இதன் பின்னர் போராட்டத்தில் கலந்து கொண்டிருந்த அரசியல் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள், கடற்றொழிலா
ளர் சமாசத்தின் அங்கத்தவர்கள் ஒன்றாக கூடி அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பாக ஆராய்ந்திருந்தனர். இதன்போது அடுத்தகட்டமாக யாழ்.கடற்றொழில் நீரியல்வளத்துறை திணைக்களத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவதென தீர்மானிக்கப்பட்டது.
இந்த தீர்மானத்தை யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர் சமாசங்களின் சம்மேளனம் அங்கீகரித்தது. தொடர்ந்து வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர் சமாசம் அங்கீகரித்தது. எனினும் வடமராட்சி கிழக்கு க டற்றொழிலாளர் சங்கம் ஆரம்பத்தில் தனது அங்கீகாரத்தை வழங்க தாமதித்த நிலையில் கடற்றொழிலாளர்கள் சமாசத்திற்கு எதிராக கூட்டத்தில் பேசினர். மேலும் சில கடற்றொழிலாளர்கள் சமாசத்திற்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர். இந்த இழுபறி சுமார் 2 மணி நேரம் நீடித்த நிலையில் பிற்பகல் 2 மணிக்கு அமைதியான முறையில் மாவட்டக்கடற்றொழில் நீரியல்வளத்துறை திணைக்களத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவதற்கு வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர் சமாசம் இணக்கம் தெரிவித்தது. ஆனாலும் தென்பகு தி மீனவர்களின் வாடிகளை பிடுங்கி எறிந்து அல்லது அவர்கள் மீது தாக்குதல் நடத்தும் வகையிலான போராட்டங்களில் கலந்து கொள்ளப்போவதில்லை என கூறியதை தொடர்ந்து யா ழ்.மாவட்ட கடற்றொழில் நீரியல்வளத்துறை திணைக்களத்தை நாளை வெள்ளிக்கிழமை காலை 8.30 மணிக்கு முற்றுகையிட்டு பாரிய போராட்டம் ஒன்றை நடத்துவதென தீர்மானம் எடுக்கப் பட்டிருக்கின்றது.