உலக சுற்றாடல் தினமான இன்று மாற்றீடுகளைத் தேடுவோம் பொலித்தீன் பாவனையைக் குறைப்போம் என்ற தொனிப்பொருளில் கிளிநொச்சிலும் முல்லைத்தீவிலும் விழிப்புணர்வு பேரணி இடம்பெற்றது.
கிளிநொச்சி மத்திய கல்லூரி மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வினை தொடர்ந்து அங்கிருந்து கிளிநொச்சி டிப்போச் சந்தி வரை மாணவர்கள் மற்றும் சூழலியலாளர்கள் கலந்துகொண்ட இந்த ஊர்வலத்தில் பிளாஸ்ரினால் ஏற்படும் மாசுபாட்டை இல்லாதொழிப்போம், பொலித்தீன் பாவனையை தடுப்போம், காடழிப்பை தடுத்து சுத்தமான காற்றை சுவாசிப்போம், போன்ற வாசங்கள் எழுதப்பட்ட பதாதைகளும் மாணவர்கள் ஏந்தியிருந்தனர்.
குறித்த நிகழ்வை மத்திய சுற்றாடல் அதிகார சபையின் வடக்கு மாகாண அலுவலகமும், மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சும் ஏற்பாடு செய்திருந்தன.
இதேவேளை, முல்லைத்தீவுப்பகுதியிலும் உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வுப்பேரணி இன்று நடைபெற்றுள்ளது.
மாற்றீடுகளைத் தேடுவோம் பொலித்தீன் பாவனையைக் குறைப்போம் என்ற தொனிப்பொருளில் முல்லைத்தீவு மகாவித்தியாலய முன்றலில் பேரணி ஆரம்பமானது.
முல்லைத்தீவு மாவட்ட மத்திய சுற்றாடல் அதிகாரசபை மற்றும் வலயக்கல்வி பணிமனை, இலங்கை செஞ்சிலுவைச் சய்க முல்லைத்தீவு மாவட்ட கிளையினர் இணைந்து இப்பேரணியை நடத்தினர்.