வடக்கு மாகாணத்தில் மின் கம்பங்களில் இணைக்கப்பட்டுள்ள கம்பி வழி தொலைக்காட்சி இணைப்பு வயர்களை அகற்றுமாறு இலங்கை மின்சார சபையின் தலைமையகம் வடபிராந்திய அலுவலகத்துக்கு பணித்துள்ளது.அதற்கமைய கேபிள் ரீவி இணைப்பு வயர்களை அகற்றும் பணிகளை மின்சார சபை ஊழியர்கள் யாழ்ப்பாணத்தில் இன்று காலை ஆரம்பித்தனர்.
இலங்கை மின்சார சபையின் இந்த திடீர் நடவடிக்கையால் கேபிள் ரீவி வாடிக்கையாளர்கள், தொலைக்காட்சி அலைவரிசைகளை பார்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
கேபிள் ரீவி இணைப்பு வழங்குவதற்காக தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் உரிமம் பெற்றவர்களுக்கு கட்டண அறவீட்டுடன் இணைப்பு வயர்களை மின் கம்பங்கள் ஊடாகக் கொண்டு செல்வது தொடர்பில், உரிய செயற்றிட்டம் தயாரிக்கப்படும் வரை தீர்மானத்தை இடைநிறுத்துமாறு அரசியல் தலைமைகளால் பரிந்துரைக்கப்பட்ட போதும் மின்சார சபை தனது தீர்மானத்தில் உறுதியில் உள்ளது என தெரியவந்துள்ளது.