வவுனியாவில் இன்று இடம்பெற்ற உந்துருளி விபத்தில் தச்சுத் தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், அவருடன் சென்ற மேலும் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
இவ்விபத்துச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், இன்று 5.06.2018 காலை 8.30மணியளவில் சூடுவெந்தபுலவு பகுதியில் உந்துருளியில் தொழிலுக்குச் சென்ற தச்சுத் தொழிலாளியான துரைச்சாமி திருநாவுக்கரசு (53 வயது) வீதியில் நின்றுகொண்டிருந்த கட்டாக்காலி மாட்டுடன் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் அவருடன் சென்ற பொன்னம்பலம் ஜெயக்குமார் (48 வயது) படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருவதுடன் உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.