வட இந்தியாவிலுள்ள உத்தர பிரதேச மாநிலத்தில் ரயில் விபத்தொன்றில் 30 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
நூற்றுக்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர்.
அதிவேக ரயில் ஒன்றின் எஞ்சினும் இரண்டு பெட்டிகளும் ரே பரேலி நகருக்கு அருகே தடம்புரண்டுள்ளன.
விபத்தில் நசுங்கிப்போன பெட்டி ஒன்றுக்குள் சிக்கியிருக்கும் பயணிகளை மீட்பதற்கு மீட்புப் பணியாளர்கள் போராடிவருகின்றனர்.
உள்ளூர் மக்களும் மீட்புப் பணிகளுக்கு உதவிவருகின்றனர்.
உயிரிழந்தவர்களிடையே சிறார்களும் உள்ளதாக அங்கிருந்துவரும் தகவல்கள் கூறுகின்றன.
இந்தியாவின் பெரிய ரயில் போக்குவரத்துக் கட்டமைப்பில் விபத்துக்கள் நடப்பது பெரும்பாலும் வழமையாக உள்ளது.
மில்லியன் கணக்கான பயணிகள் நாளாந்தம் பயணிக்கும் இந்திய ரயில்வே கட்டமைப்புக்கு இன்னும் அதிகளவில் முதலீடுகள் தேவைப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.