வடக்கு மாகாணத்தில் மக்களின் செயற்பாடுகளில் சிறீலங்கா படைகள் தலையிடுவதை நிறுத்த வேண்டும் என வடக்கு மாகாண சபையில் தீர் மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுஇ அந்த தீர்மானத்தை சிறீலங்கா ஜனாதிபதி , பிரதமர் ஆகியோருக்கு அனுப்பி வைப்பதற்கு ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண சபையின் 122ஆவது அமர்வு நேற்று முன்திலம் அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தலை மையில் நடைபெற்றது.
இதன் போதே மேற்படி தீர்மானிக் கப்பட்டுள்ளது. வடமராட்சி கிழக் கில் தென்னிலங்கையை சேர்ந்த வர்கள் அத்துமீறி தொழிலில் ஈடு படுகின்றனர். அதனை தடை செய்ய வேண்டும். உறுப்பினர்களான சுகிர்தன் மற்றும் சிவாஜிலிங்கம் ஆகியோர் சபையில் கூறி இது தொடர்பில் சிறீலங்கா ஜனாதிபதி மற்றும் மத்திய கடற்றொழில் அமைச் சருக்கு அறிவிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர்.
மேலும் சட்ட விரோத கடலட்டை வாடிகள் அமைக் கப்பட்டதற்கு எதிராக போராடிய வடமராட்சி மீனவர்களை சிறீலங்கா இராணு வம் மற்றும் கடற் படை மிரட்டுவது கண் டிக்கத்தக்கதாகும்இ நல்லாட்சி என்று கூறிக் கொண்டு. போராட் டத்தில் ஈடுபட்டு வரு கின்ற மக்களை அச் சுறுத்துவது ஜனநாயக விரோத செயலாகு மெனக் கூறினார்கள். இதன் போது கருத்து தெரிவித்த உறுப்பினர் ரவிகரன் விகாரை கொக்கிளாயில் தனியார் காணியில் அத்துமீறி அமைக் கப்படும் போதுஇ கொக்குளாயில் மட்டுமல்லஇ நல்லூரி லும் விகாரை வரும் என்று சபை ஆரம் பிக்கும் போது கூறி னேன்.
இப்போது முல் லைத்தீவு சாலை யில் இருந்து வட மராட்சி வரைக்கும் சிங்கள மீனவர்கள் வந்துவிட்டார்கள். இனியாவது இந்த விடயத்தில் கூடிய அக்கறை எடுத்து செயற்பட வேண்டும் என கூறினார்.
இதன் போது கருத்து தெரிவித்த கல்வி அமைச்சர் கலாநிதி சர்வேஸ் வரன்இ சிவில் விடயத் தில் சிறீலங்கா இராணுவம் தலையிட கூடாது என்று தீர்மானம் ஒன்றை நாங்கள் எடுக்க வேண்டும்இ
இவ்வாறன சட்ட விரோத நடவடிக் கைகள் கடற்படை யின் அனுசரணை யுடன்தான் நடை பெறுகின்றன.
ஆகவே சிவில் விடயத்திற்குள் சிறீலங்கா இராணுவம் தலை யீடு செய்யக் கூடாது என சிறீலங்கா ஜனாதிபதிஇ பிரத மர் மற்றும் கடற் றொழில் அமைச்சர் ஆகியோருக்கு கடிதம் ஒன்று அனுப்ப வேண் டும் என கூறினார். இந்த விடயம் சபை யில் ஏற்றுக்கொள் ளப்பட்டது.