உதயசிறியை பொதுமன்னிப்பில் விடுதலை செய்க; மட்டக்களப்பில் கவனயீர்ப்புப் போராட்டம்!

0
330

showImageInStoryசிகிரியாவிலுள்ள சுவரில் தனது பெயரை எழுதினார் என்ற குற்றச்சாட்டில் இரண்டு வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட உதயசிறிக்கு பொதுமன்னிப்பு வழங்குமாறு கோரி சித்தாண்டி பொது அமைப்புக்கள் ஒன்றியம், சித்தாண்டி வாழ் பொதுமக்கள் இணைந்து இன்று  கவனயீர்ப்பு போராட்டமொன்றை மேற்கொண்டனர்.

தான் வேலைசெய்யும் நிறுவனத்தின் நண்பர்களினால் ஒழுங்குசெய்யப்பட்ட சுற்றுலா ஒன்றுக்காக சென்றிருந்தார்.
சென்ற சுற்றுலாவின் ஓர் அங்கமாக தம்புள்ள பகுதியில் இருக்கின்ற சிகிரியா ஓவியத்தை பார்வையிட சென்ற வேளை அவர் அங்குள்ள பளிங்கு சுவரில் தனது பெயரினை எழுதினார் என்ற அடிப்படையில் வழக்கு தொடரப்பட்டு கடந்த 02ஆம் திகதி தம்புள்ள நீதிமன்றத்தினால் எடுத்துக் கொள்ளப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
விசாரணையின் பின்னர்  2 வருட சிறைத்தண்டனை வழங்கப்பட்டு குறித்த யுவதி அநுராதபுர சிறைச்சாலையில் சிறையிடப்பட்டார்.
எனவே மட்டக்களப்பு, சித்தாண்டியைச் சேர்ந்த சின்னத்தம்பி உதயசிறிக்கு பொதுமன்னிப்பு வழங்கி அவரை விடுதலை செய்யுமாறு கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றினை மேற்கொண்டதுடன் விடுதலையை வலியுறுத்தும் மகஜர் ஒன்று ஜனாதிபதியிடம் கையளிப்பதற்காக ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் அலுவலகத்தில் கையளிக்கப்பட்டது.
குறித்த மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
மட்டக்களப்பு, சித்தாண்டி கிராமத்தை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட செல்வி. சின்னத்தம்பி உதயசிறி (வயது – 27) யுவதி 14.02.2015 அன்று  இவரது அறியாமையின் காரணமாக நிகழ்ந்த ஒரு காரணமாக நாங்கள் கருதுகின்றோம்,
இவர் சிறு வயதிலே தந்தயை இழந்ததோடு இவரது தாயார் அவர் அரிசி குற்றி வித்தல், இடியப்பம், பிட்டு போன்றவற்றை தயாரித்து விற்று தனது ஐந்து பிள்ளைகளையும் பராமரித்து வந்தார்.
தனது குடும்ப கஸ்டநிலை காரணமாக தனியார் தொழிற்சாலை ஒன்றில் வேலைக்கு சேர்ந்துள்ளார்.
எனவே இவ் யுவதியின் எதிர்கால நன்மை கருதி தங்களின் கருணையினை இந்த ஏழை யுவதிமீது காட்டுமாறு தங்களை மிகவும் பணிவன்புடன் கேட்டுக்கொள்வதோடு மட்டக்களப்பு வாழ் மக்கள் என்றென்றும் நன்றியுடையவர்களாக இருப்பார்கள் என்பதை தங்களை மேலான கவனத்திற்கு அறியத்தருகின்றோம் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, உதயசிறியின் தாயார் மிகுந்த உருக்கத்துடன் தனது மகளை மன்னித்து விடுவிக்குமாறும் கோரிக்கை விடுத்திருந்தமையும்  இங்கு குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here