கிளிச்சி பிராங்கோ தமிழ்ச்சங்கத்தின் ஏற்ப்பாட்டில் கிளிச்சி நகரசபையின் ஆதரவுடன் தமிழீழ மக்கள் பேரவை தமிழ்ச் சங்களின் கூட்டமைப்பு தமிழ் இளையோர் அமைப்பு. ஆகிய அமைப்புக்கள் இணைந்து. தமிழரின் வாழ்வியலும் வரலாறும் என்னும் தலைப்பில் பிரஞ்சு மொழியில் விவாத நிகழ்வு 21.05.2017 அன்று 20:30 மணிமுதல் 22:00 மணிவரை இடம் பெற்றது .
தமிழரின் கலாச்சாரம் வாழ்வியல் போராட்டம் சம்பந்தமான கண்காட்சி நிகழ்வு நடைபெற்று ஈழத்தமிழர்கள் பிரச்சனைகள் பற்றி விளக்கப்பட்டதுடன் விவாத நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது. முதலில் தமிழரின் கலாச்சாரம் பண்பாடுபற்றியும் நாம் ஏன் இங்கு புலம்பெயர்ந்து வந்தோம் எனும் கேள்விக்கு பதில் கூறும்வகையில் காணொளி காண்பிக்கப்பட்டு அதுபற்றிய விவாதம் கேள்வி பதில் ஊடாகநடைபெற்றது.
தொடர்ந்து இரண்டாவது பகுதியாக இன்று ஈழத்தமிழர்களின் நிலைபற்றி வெளிநாட்டு ஊடகங்களால் வெளிகொணரப்பட்ட உண்மை நிகழ்வுகளின் தொகுப்பு காணொளிஊடாக காண்பிக்கப்பட்டு கேள்விகளின் ஊடாக சந்தேகங்கள் தெளிவுபடுத்தப்பட்டன
தொடர்ந்து தமிழீழ மக்கள் பேரவையின் சார்பாக திரு திருச்சோதி அவர்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார். பிரான்சு தமிழ் இளையேர் அமைப்பினரால் எமது நாட்டுப்பிரச்சனை பற்றி அரசியல்ரீதியாக விளக்கங்கள் முன்வைத்ததை பலரும் பாராட்டினார்கள் இதுபோன்ற விவாதங்கள் சகல சங்கங்களினாலும் முன்னெடுக்கப்படல் வேண்டும் என்ற விருப்பத்தையும் தெரிவித்துக் கொண்டார்கள்
இதில் பல தமிழ் இளையோர்களும் பிறசமூகத்தினரும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. நிறைவாக விருந்துப் பரிமாறலுடன் நிகழ்வு இனிதே முடிவுபெற்றது.