கடந்த சனிக்கிழமை (26) மாலை, தனது உயிரை பணயம் வைத்து நான்காம் மாடியில் இருந்து குழந்தையை காப்பாற்றிய Mamoudou Gassama, தற்போது சர்வதேச அளவில் மக்கள் மனதில் இடம்பிடித்துள்ளார். .
Mamoudou Gassama வை பிரான்சின் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் சந்தித்தார். அவருடன் உரையாடிய ஜனாதிபதி மக்ரோன், அவருக்கு பிரெஞ்சு குடியுரிமையும் வழங்கி, தீயணைப்பு படையில் வேலையும் வழங்குவதாக உறுதியளித்துள்ளார்.
மாலி நாட்டில் இருந்து அகதியாக இருந்த Mamoudou Gassama, சர்வதேச அளவில் புகழடைந்துள்ளார். அவர் 32 வினாடிகளின் நான்காவது மாடிக்கு தாவி ஏறி, குழந்தையின் உயிரை காப்பாற்றியதை பல அரசியல் பிரமுகர்களும் பாராட்டத்தவறவில்லை.
பரிசின் நகரபிதா ஆன் இதால்கோ முன்னதாக, ‘Mamoudou Gassama – 18 ஆம் வட்டாரத்தின் ஹீரோ!’ என புகழாரம் சூட்டியிருந்தார். பின்னர் இவரை பிரபல பிரெஞ்சுத் தொலைக்காட்சி நேரடி நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அழைத்தது. அதில் கலந்துகொண்ட Mamoudou Gassama, ‘நான் எது குறித்தும் யோசிக்கவில்லை. நான் அந்த குழந்தையை காப்பாற்றினேன்!’ என அவர் நிகழ்ச்சியில் குறிப்பிட்டார்.
செப்டம்பர் 2017 ஆம் ஆண்டு மாலி நாட்டில் இருந்து அகதியாக பிரான்சுக்கு வந்துள்ளார். அதன் பின்னர் அகதிகள் தங்குமுகாமில் அவர் தங்கியிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மாளிகையில் இருந்து Mamoudou Gassama வெளியே வரும்போது, ஊடகத்திடம் தெரிவிக்கும் போது, ‘ஜனாதிபதி எனக்கு ஒரு பரிசு தந்தார். இதுவரையில் என் வாழ்நாளில் அதை அனுபவித்ததில்லை!’ என அவர் குறிப்பிட்டார்.
Home
உலகச்செய்திகள் உயிரைப் பணயம் வைத்து குழந்தையை காப்பாற்றிய வருக்கு குடியுரிமையும் வேலை வாய்பும் !